கூமாச்சி / Koomachi
A Sharp Pencil
கூமாச்சி
வழக்கம்போல், நான் ஜிதேஷுக்கும் ராமனுக்கும் இடையே உட்கார்ந்திருந்தேன். எங்கள் வகுப்பில் நாங்கள்தான் முதல் பெஞ்சர்கள். எங்கள் வகுப்பறையில் ஒரு மேசையில் மூன்று பேர் உட்கார முடியும். எங்கள் வகுப்பில் மொத்தம் 12 மேசைகள் இருந்தன, ஒவ்வொரு வரிசையிலும் நான்கு, மொத்தமாக 36 மாணவர்களுக்கு இடம். ஆனால் எங்கள் வகுப்பின் மாணவர் எண்ணிக்கை 27 மட்டும் தான். மூன்று வரிசையிலான மேசைகளில் நடு வரிசையின் முதல் மேசையாக எங்கள் மேசை இருந்தது. அதிக இடமே இருந்தாலும், எங்கள் மேசையில் மூன்றுபேரும் கூடிக் கொண்டே உட்கார முடிவு செய்தோம்.
அன்று தினத்தின் இரண்டாம் பிரியட், புவியியல். புவியியல் ஆசிரியை வருவார் என எதிர்பார்த்து காத்திருந்தோம். இன்று “contour maps ” எனும் விளிம்பு வரைபடங்கள் பற்றி தேர்வு இருக்கும் என்றும், சிகரம், ஓரங்கி, சமவெளி போன்றவற்றின் முகடுக்கோட்டுகளை வரைய வேண்டும் என்றும் சொல்லியிருந்தார். இந்தியா அரசியல் மற்றும் இயற்கை வரைபடத்தை எடுத்துக்கொண்டோம், புவியியல் குறிப்பேடு மேசையின் மேல் திறந்தநிலையில் வைத்தோம் . நான் வரைபடம் வரைவதில் ஆர்வமாக இருந்தேன், மேலும் வரைபடங்கள் எப்போதும் என்னை கவர்ந்தன.
காசி ஸ்ரீனியுடனும் ஸ்ரீநிவாசுடனும் உட்கார்ந்திருந்தான். அவர்களை “இரண்டு ஸ்ரீனிகள்” என்று அழைத்தோம். காசி சற்றே பதட்டமாக இருப்பதாக தோன்றியது. எப்போதும் பதட்டமாய்தான் இருப்பான், ஆனால் இன்று பயமும் பதட்டமும் கலந்து இருந்தது. பையை, ஜியோமெட்ரி பெட்டியையும், பென்சில் பெட்டியையும், புரட்டப்பட்ட திரண்ட புத்தகங்கள் என அனைத்தையும் அலசிக்கொண்டிருந்தான். அவன் ஏதையோ வெறித்தனமாக தேடுவது போலவே தோன்றியது.
இரண்டு ஸ்ரீனிக்கள், ஆசிரியை வணஜா, பெரிய சாளரங்களில் கடந்து வருவதைப் பார்த்து “Good Morning, Miss” என்று எழுந்து குரலிட்டனர். பிறகு மற்ற வகுப்பினரும் ஒரே நொடியில் “Good Morning, Miss” என்று பாடலாக பின்தொடர்ந்தோம். காய்ச்சல் கனவில் திடீரென எழுந்தது போல் துள்ளிக் குதித்த காசி, ஆசிரியை வனஜாவைப் பார்த்ததும் வெளிறிப் போனான்.
வணஜா மிஸ், கரும்பலகையில் கேள்விகளை எழுதினார்கள், “OK, Start now”, என்றாள். வகுப்பில் எழுத்துப் பென்சில்கள், இரப்பர்கள், கூர்ப்பிகளின் சலசல்ப்பு சத்தம் ஒலித்து, நாங்கள் பதில்களை வரையதொடங்கியதும் ஒரு அமைதியான மெல்லிய ஓசை அமர்ந்தது. காசி இன்னும் எழுத ஆரம்பிக்கவில்லை; எதையோ தேடிக்கொண்டிருந்தான். பின்னர் ஜிதேஷை நோக்கி “ஏ, ஜிதேஷ், ஜிது” என்று கூப்பிட்டான். ஜிதேஷ் கவனிக்கவில்லை. பிறகு இரண்டு ஸ்ரீனிக்களை நோக்கி, “ஏ, ஸ்ரீனி, ஸ்ரீனிவாஸ், ப்ளீஸ் டா… உதவி செய்யுங்க டா” என்று சொன்னான். இருவரும் பதில்களை எழுதுவதில் மும்முரமாக இருந்தனர். அவனை கவனிக்கவில்லை. காசி அருகில் உட்கார்ந்திருந்த சோபியை நோக்கி, “சோபி, சோபி, ப்ளீஸ் டி, உதவி பண்ணுடி” என்று கேட்டான். சோபி கோபமாக “ஸ்ஸு” என்று கத்தினாள்.
இதை பார்த்துக்கொண்டிருந்த வனஜா மிஸ், “Kasinath, stand up!” என்று சொன்னார். காசி எழுந்து நின்று நடுங்கிக்கொண்டிருந்தான். பயம் அதிகமாகவே தெரிந்தது. வணஜா மிஸ் “What is it? What do you want?”, என்றார்.
காசி மெலிதாய் “மிஸ், கூமாச்சி” என்று கூறினான். வணஜா மிஸ் “Speak in English, dammit” என்று கத்தினார். காசி சற்றே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு “I want to கூமாச்சி this Pencil” என்று சொன்னான்; மேலும் தன் மழுங்கிய பென்சிலை காட்டினான். வணஜா மிஸ்-ஆல் அதை சகிக்க முடியவில்லை. “Get out. Stand outside the class until the end of the period. No more test for you.” என்று கத்தினார்.
காசி பதட்டத்தோடு கதவுக்குச் சென்று வெளியே நின்று கொண்டு, “கூமாச்சி” என்று சொல்லிக்கொண்டே தன் கைகளால் மலைபோல் சைகையைக் காட்டிக்கொண்டிருந்தான். பின்னர் அவனுக்கு “கூமாச்சி காசி” என்ற புனைப்பெயர் உரித்தானது.
Sharp Pencil
கூமாச்சி
As usual, I sat nestled between Jitesh and Raman. We were the first benchers in our class. Our desk could seat three people and our desk was the first in the middle of the three rows of desks. We had 12 desks arranged in 3 rows, seating a total of 36. Our class strength though was only 27. There was plenty of room, I suppose, but we chose to sit together at our desk.
It was the second period of the day, and it was going to be Geography. We were waiting for Miss to come in. She mentioned that there will be a test today on contours, and drawing contours for ridge, escarpment, peak, and the like, that we learned the day before. We had our India Political and Physical map at the ready and our Geography composition notebook opened as well. I liked drawing maps, and maps always intrigued me.
Kasi was seated next to Srini and Srinivas. The Two Srinis as we called them. Kasi seemed to be fidgety. He always is, before any class. However, this time his fidgetiness bordered on fear and anxiety. He was rummaging through his bag, geometry box, pencil box, and flipped open books. It looked like he was frantically searching for something.
The two Srinis, saw Miss Vanaja, our Geography teacher, as she walked past the large windows of our classroom, and entered. They stood up and shouted, “Good Morning, Miss” and the rest of the class stood up and followed in the sing-song “Good Morning, Miss”. Kasi jumped, as if he was suddenly awoken from a fever dream, and went pale as he saw Miss Vanaja.
Immediately, Miss Vanaja, wrote the questions on the blackboard, and said, “OK, begin now”. There was a rustle of pencils, rubbers, sharpeners, and a quiet hum rolled through the classroom as we started drawing out the answers. Kasi hadn’t begun, and was still rummaging. And he called out to Jitesh, “Hey, Jitesh, Jitu”. Jitesh didn’t respond. Kasi turned to the Two Srinis, “Hey, Srini, Srinivas, please da…, help” The Two Srinis were busy writing the answers and didn’t heed. Kasi turned to the girls to his right. “Shobhi, Shobhi, please di, help di”. Shobhi was irked and she hissed a loud shush.
Miss Vanaja, took note, stood up and growled “Kasinath, stand up”. Kasi stood up, and started to shake. He was nervous, but I hadn’t seen him this nervous. Miss Vanaja, asked, “What is it? What do you want?” Kasi, let out a feeble, “Miss, koomachi”. Miss Vanaja said, “Speak English dammit”. Kasi gathered courage and said, “I want to make koomachi this pencil”, and lifted and showed his blunt pencil. Miss Vanaja, could not take it. A blunt pencil tip. She yelled, “Get out, and stand outside until the end of the period. No more test for you”.
Kasi fidgeted his way to the door, and stood outside, looking in, saying, “koomachi”, and making a mountain gesture with his hand. He later was christened Koomachi Kasi.



